நித்யானந்தத்தின் சத்யாகிரகம்
உறுதி மிக்க நூறு இளைஞ்ர்களை தாருங்கள் நான் இந்த உலகத்தை
மாற்றி காட்டுகிறேன் - விவேகானந்தர்.
விவேகானந்தர் கூறிய அந்த இளைஞர்கள் அப்போது அவருக்கு
கிடைக்கவில்லை. இப்போது
அவர் இருந்தால் அந்த நூறு பேருக்கு பதிலாக இந்த ஒரு
இளைஞ்னை தேர்ந்தெடுத்திருப்பார்.
அவர் நித்யானந்தம்.
கோவையின் நெரிசலில் இருந்து விலகி அவிநாசி சாலையில்
இருபது கி. மீ பயணத்தில் இருக்கிறது மயிலம் பட்டி.
தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியை கடந்து சென்றால் ஊருக்கு
ஒதுக்குபுறமாக உள்ளது அந்த இடம்.
சாலை விரிவாக்கம் மற்றும் நகரமயமாதலின் விளைவு மரங்கள்
வெட்டி வேரோடு சாய்க்கப்படுவதுமிகச்சாதாரணமாக இருக்கிறது.
அது இவருக்கு மிக ரணமாக இருக்கிறது.
அன்று இருபது வயதை எட்டாத அந்த இளைஞ்னுக்கு ஏற்பட்ட தாக்கம்
இன்று முன்னாள் குடியரசுத்தலைவர்
உயர்திரு. டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் கனவுதிட்டமான
"பசுமை பஞ்சாயத்து" எனும் அற்புதமான திட்டத்தின் முன்னோடியாக
விளங்குகிறார் நித்யானந்தம்.
நமது "வளரும் தமிழகம்" இதழுக்காக சந்திக்க சென்றபோது
மயிலம்பட்டியின் ஊரின் துவக்கத்திலேயே
நம்மை வரவேற்று அழைத்துச்சென்றார். குடியிருப்புகளை தாண்டி
இருந்தது அந்த இடம்.
ஐ நா விலும் அமெரிக்காவிலும் போய் பேசியது இவராஎன
வியக்குமளவிற்கு எளிமையாக இருந்தார்.
" மழையில்ல ஊரே வறண்டு போச்சுன்னு பொலம்பாம இந்த
மண்ணுக்கு நம்மால முடிஞ்சத செஞ்சா
நாமளும் நல்லாருப்போம் இந்த ஊரும் நல்லாருக்கும்" என
கொங்கு தமிழில் வெள்ளந்தியாக பேசுகிறார்.
இந்திய இளைஞ்ர்களின் பிரதிநிதியாக ஐ நாவும் அமெரிக்காவும்
இவரை அழைத்து அங்கு பேச சொல்லும் வரை
இவரின் சாதனைகள் வெளி உலகிற்கு பெரிய அளவில்
தெரியவில்லை. 25 வருடங்களாக சத்தமில்லாமல் இவர்
செய்த சேவைகள் உள்ளூர் மக்கள் கண்டுகொள்ளாவிட்டாலும் இவரின்
நலன் விரும்பிகளால் அயல் நாடுகளுக்கு தெரிந்தது.
நடுத்தர குடும்பத்தில் பிறந்து பத்தாவது வரை படித்த இவர் LMW
நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தாலும் சமூக சேவை
ஆர்வம் மட்டும் தீயாக அடி மனதில் எரிந்து கொண்டிருந்தது.
நண்பர்கள் சிலர் உதவியுடன் " தியானா பொது சேவை மையம்"
என்ற என்ற பெயரில் 1988ல் துவக்கி எய்ட்ஸ் விழிப்புணர்வு
பிரச்சாரத்தை கோவையின் சுற்று வட்டார கிராமங்களில் துவங்கினார்.
மனைவியின் நகைகளை அடகு வைத்தும் விற்றும் போதாக்குறைக்கு
கடன் வாங்கியும் இதை நடத்தினார்.
இவரின் தீவிர ஈடுபாட்டை அறிந்த கோவை மாவட்ட ஆட்சியாளர்
திரு. முருகானந்தம் அவர்கள் பாராட்டி கௌரவித்ததுடன்
சான்றிதழும் வழங்கினார். இன்னும் அதிக உத்வேகத்துடன் தொடர்ந்த
சமூகப்பணியால் அதிகமான விடுப்பு எடுக்க நேர்ந்தது.
இவர் பணியாற்றிய LMW நிர்வாகம் இவருக்கு மெமோ
கொடுததோடல்லாமல் பணி நீக்கம் செய்தது. ஆனாலும் தளராமல்
LMW சேர்மேன் திரு. சஞ்சய் ஜெயவர்ததன வேலுவை சந்தித்து
தன்னுடைய சமூக சேவை ஆர்வத்தை ஆவணங்களுடன் விளக்கினார்.
அதையெல்லாம் பார்த்த அவர் " உன் சமூக சேவையை
தொடர்ந்து செய். உன் சம்பளம் வீடு தேடி வரும் " என்று கூறியதுடன்
இன்று வரை ஆதரவளித்து வருகிறார். இதை நம்மிடம்
சொல்லும்போதே அவரின் கண்கள் பனிக்கிறது.
பசுமை பஞ்சாயத்து எனும் உன்னதமான திட்டத்தை துவங்கிவைத்த
உயர்திரு. டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் கோவை வந்த
போது இவரின் சேவையை பாராட்டியதுடன் இவருக்கு உறுதுணையாக
இருந்து வரும் மனைவியயும் தந்தையின் பணிகளை
உடனுக்குடன் ஆவணப்படுத்தி அவரின் வேலைப்பழுவை குறைக்கும்
மகன்கள் இரட்டையர்களான ஜெகதீஷ்-ஜெகதீப் இருவரையும்
வெகுவாக பாராட்டினார்.
13 முறை சிறந்த இளைஞ்ருக்கான விருதுகளை பல்வேறு
மாவட்ட ஆட்சிதலைவர்களிடம் பெற்றுள்ள நித்யானந்தம் சிறு வயது
முதலே மரம் வளர்ப்பதிலும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்திலும்
இன்று வரை முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறார். 2013 டிசம்பரில்
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கன்யாகுமரியில் பிரச்சாரத்தில்
ஈடுப்டப்போவதாக தெரிவித்தார்.
தன்னலமின்றி இவர் ஈடுபாட்டுடன் செய்யும் சேவைக்காக 2012ம் வருடம்
வாஷிங்டன்ல் நடந்த உலக எய்ட்ஸ் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக
இவரை பேச அழைத்தது INTERNATIONAL AIDS COMMITTEE.
அதன் பிறகு 2013ல் ஐ. நா சபையில் நடந்த உலக இளைஞர் மாநாட்டில்
இந்தியாவின் பிரதிநிதியாக இவரை அழைத்தது.
அதன் பிறகே இந்தியாவில் எய்ட்ஸ் மற்றும் சுற்றுசூழல் குறித்த
150க்கும் மேற்பட்ட மானாடுகளில் இவரை பேச அழைத்து
கௌரவப்படுத்தியது.
மேலும் சிறுதுளி, ராக் மற்றும் விஜயலட்சுமி அறக்கட்டளை போன்ற
தண்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கோவையில்
உள்ள குளங்களை தூர்வாரும் பணியில் தன்னை
ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
330 ஏக்கர் பரப்பலவிலான உக்கடம் பெரியகுளம் தற்போது உயர்த்தப்பட்ட
கரையுடன் ஆங்காங்கே சிறுசிறு தீவுகளுடன் பல்வேறு மரங்களுடன்
ரம்மியமாக காட்சியளிக்கிறது.
சமூக சேவையில் ஈடுபடுபவர்களை ஏதோ லாப நோக்கொடு
செயல்படுவதாக கருதும் சிலரால் இளைஞ்ர்கள் இதில் ஈடுபடவே
பயப்படுகிறார்கள் என்று வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். மேலும்
" உலகத்தில பெரிய பணக்காரரா இருந்த பில் கேட்ஸ்ம் உயர்ந்த
பதவிலிருந்த பில் கிளிண்டனும் மன நிம்மதி தர்றது சமூக
சேவைதாண்னு சொல்லி இப்போ சமூக சேவை பண்றாங்க.
நெறய பேரு நேரமில்லைன்னு சொல்றாங்க " நாம ரோட்டுல
போகும்போது ஒரு ஆம்புலன்ஸ் போச்சுன்னா அந்த உயிர்
நல்லாயிருக்கணும்னு மனசார நெனச்சாலே போதும் நாம
தூய்மையாயிருவோம். நீங்க போய் அவங்களுக்கு உதவி
பண்ணலேன்னாலும் பரவாயில்ல. அந்த எண்ணம் இருந்தாலே
போதுங்க" என்றவர் மேலும் இளைஞ்ர்கள் பொது வாழ்க்கைக்கு
வரவே பயப்படராங்க. என் தெருவுல ரோடு போட்டா நான் போய்
பாக்கணும் மணல் சரியா இருக்கா ஜல்லி சரியா இருக்கான்னு
நானே போய் கேட்டா ஓ இதுல இவனுக்கு கமிஷன் இருக்குமோன்னு
சுத்தி இருக்கறவங்க பேசுவாங்க. நமக்கென் வம்புன்னு ஆர்வம்
இருக்கறவனும் ஒதுங்கி போயிருவான். அப்ப யாருதாங்க கேக்கறது.
இது நம்ம பணம்ங்க. இத பத்தி நம்ம ஜனங்களுக்கு இன்னும்
விழிப்புணர்வு வரணுங்க" என்று கோபமும் வருத்தமுமாக சொன்னவர்
மேலும் " ஏன் மரம் வேக்கறதுல ஆர்வம்னு நெறய பேர் கேக்கறாங்க.
20 வருசத்துக்கு முன்னால தண்ணிய காசு குடுத்து வாங்கணும்னு
சொன்னா சிரிப்பாங்க. ஆனா இப்போ?
பெருநகரங்களில ஆக்சிஜன் பார்லர் தொரக்கறாங்க.
ஒரு மணி நேரத்துக்கு அம்பது ரூபாயாம்.
நம்ம தலைமுறை பரவால்லிங்க அடுத்த தலைமுறை?
ஐ. நா. சபையோட அறிக்கையில தண்ணீர் மக்களோட உரிமைன்னு
இருக்கு. ஆனா நம்ம நாட்டில அத தேவைன்னு மாத்திட்டாங்க .
தேவைன்னா என்ன? தேவைப்படரவங்க காசு குடுத்து வாங்கிக்கலாம்.
உரிமைன்னா கண்டிப்பா அரசாங்கம் கொடுத்தாகணும்.
நாம எல்லாத்துக்கும் அரசாங்கத்தயே குத்தம் சொல்லாம நம்மால
முடிஞ்சத பண்ணுவோங்க. நம்ம முன்னோர்கள் நமக்கு நல்ல உலகத்த
தந்திட்டு போயிருக்காங்க. அட நாம சீரழிக்காமாயாவது அடுத்த
தலைமுறைக்கு கொடுப்போம். இயற்க்கை வளங்களை அழிக்க நமக்கு
எந்த உரிமையும் கெடயாதுங்க. இத வேற யாராவது வந்து
மாத்துவாங்கன்னு நாம எப்படிங்க சும்மா இருக்க முடியும்.
என்று அனல் தெறிக்க பேசியவர் சற்று ஆசுவாசமாக
" பசுமை பஞ்சாயத்து மூலமா ஊராட்சில இருக்கற பொறம்போக்கு
நெலத்த அந்த ஊராட்சி மன்ற தலைவர் மூலமா குடுத்தா
மூணு மாசத்தில நெலத்த சரிப்படுத்தி குழியெடுத்து மரக்கண்னு நட்டு,
சொட்டு நீர் பாசனம் அமைத்து அந்த மரம் சுயமா தன்னை
பாத்துக்கரவரைக்கும் கூட இருந்துட்டு அடுத்த ஊராட்சிக்கு போறோம்
என்று முடித்தார்.
25 வருடங்களுக்கு முன் ஒரு சிறு தீப்பொறியாய் இருந்த நித்யானந்தம்
சஞ்சய் ஜெயவர்ததன வேலுவால் தீப்பிழம்பாய் மாறி உலக
நாடுகளில் உரை நிகழ்த்தி பல்லாயிரக்கணக்கான இளைஞ்ர்களுக்கு
அவரின் பேச்சினால் அந்த தீயை பரவ வைத்த அவருடன்
பேசிக்கொண்டிருந்த நேரத்தில் பாரதியின் 'அக்கினி குஞ்சொன்று
கண்டேன்" எனும் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது.
அவரின் பேச்சில் தெரிந்த சமூக அக்கறை நிச்சயம் பல
இளைஞ்ர்களுக்கு ஊக்கமாக இருக்கும். இந்தியாவை மாற்றும்
சக்தி தென்னிந்தியாவில் இருந்து புறப்படும் என்ற விவேகானந்தரின்
வாக்கு உண்மையாகும் .