வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

"உலகப் போர்களின் எச்சம்தான் இந்த உரங்கள்.
முதல் உலகப் போரில் எட்டு லட்சம் சிறைக்கைதிகளைக் கொல்ல அம்மோனியா
 நச்சுப்புகை பயன்படுத்தப்பட்டது.உலகப்போர் முடிந்ததும் அதுவே பூச்சிக்கொல்லி
மருந்தாகப் புது அவதாரம் எடுத்தது.இரண்டாம் உலகப்போர் முடிந்ததில் வெடிகுண்டுக்காரர்களின்
சந்தை சரிந்தது. வெடிகுண்டுத் தயாரிப்பில் மிச்சப்பட்ட அம்மோனியா - சூப்பர் பாஸ்பேட் போன்ற வெடி
 உப்புக்களை எங்கு கொட்டி  தொலைப்பது? அல்லது இந்த கழிவுகளை எப்படிச் சந்தைப்படுத்துவது?
வியாபார மூளைகளில் கந்தகம் எரிந்தது. எந்த உலோக  உப்புக்கள் மனிதச்சந்தையை
 இழந்து விட்டனவோ அதே உலோக உப்புக்களுக்கு ஒரு மண் சந்தை தயாரிக்கப்பட்டது.
அவை ரசாயன உரங்களாய் ரசவாதம் பெற்றன. மனிதனைக் கொன்ற  மிச்சம், மண்ணைக் கொன்றது.
 இது தான் பூச்சி மருந்தும் உரமும் பிறந்த கதை. மூலத்தை இழந்து விட்டான் இந்திய விவசாயி;
மூளைச்சலவை செய்யப்பட்டான் உலக விவசாயி. சாணமும், எருவும், சாம்பலும் தழையும் குழைத்துக்
குழைத்துக் கொட்டிச் செய்யப்பட்ட விவசாயம் சோதனைக் குழாய்களின் கைகளுக்குப் போய்விட்டது.
மலடாகிப் போனது  நிலம்
நஞ்சாகிப் போனது உணவு - கவிப்பேரரசு வைரமுத்து.

வைரமுத்து அவர்களின் இந்த வைர வரிகள் வாசிப்பவர்களின் ரசிப்புத் தன்மையை தாண்டி ஒரு சமூக
மாற்றத்திற்கான அவரின் உணர்வாக,  அறைகூவலாக  தெரிகிறது.
மூன்றாம் உலகப்போர் என்ற அவருடைய  படைப்பை ஏதோ ஒரு கவிதை நூல் என்று தான் நினைத்திருந்தேன்
நண்பர் ஜெயக்குமார் அதை என்னிடம் கொடுக்கும் வரை. அலுவலகத்தில் ஒரு மாலை வேளையில்
முன்னுரையை படிக்க துவங்கியது மட்டும் தான் நினைவில் இருந்தது. ஒரே மூச்சில் படித்து முடித்து
புத்தகத்தை கீழே வைத்தபோது, இதுவரை நான்  உட்கொண்ட உணவை பற்றி முதன் முதலாக அடி மனதில்
ஒரு பயம் தோன்றியது. இந்த உணவைத்தான் என் மனைவி, மக்கள், குடும்பம் கிராமம், ஊர், ஏன் இந்த உலகமே
உண்டுகொண்டிருக்கிறது. எத்தனையோ நோய் பாதிப்புகளை உள்வாங்கிக்கொண்டு தான் இந்த சமூகம் இன்னமும்
நோய்களின் வலியோடு இயங்கிக்கொண்டிருக்கிறதா? இதற்கே இந்த அளவு முன்னேற்றம்  என்றால் ரசாயனக்
கலப்பில்லாத இயற்கை உணவுகளை உட்கொண்டிருந்தால் உரமேறிய உடலோடும், உன்னதமான மனதோடும்
இன்னும் இந்த உலகத்தை எவ்வளவு முன்னேற்றியிருப்போம்?
இந்த புத்தகத்தை படிக்கும்போது ஒரு சிறு கிராமத்தில் துவங்கி, வேளாண்மை பல்கலை கழகத்தின் அனைத்து
பேராசிரியர்களையும் ஒரே சமயத்தில் சந்தித்து உரையாடியதுபோல் இருந்தது.
ஏராளமான மனித உயிர்களை பலிகொண்ட இரண்டு உலகப்போர்களை விடவும், ஆயுதங்களின்றி
தற்போது இந்த மண்ணை சத்தமில்லாமல் கொன்று வரும் ரசாயன உரங்களின் தீமைகளையும் அதனால்
விவசாயிக்கு ஏற்படும் அதீதமான பாதிப்புகளையும் ஒரு கதையாகக் கூறும் இந்த படைப்பு, ஒவ்வொரு
விவசாயியும், ஏன் ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டும். நான் உணர்ந்த அந்த பாதிப்பை அனைவரும் உணர்ந்து,
இயற்கை விவசாயத்தில் மட்டும் ஈடுபட்டு மண் செழிக்கவும், மனிதம் தழைக்கவும் பாடுபடவேண்டும்.

இலாபம் கொழிக்கும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறையில் கால் பதித்து வெற்றிகரமாக
அதை நடத்தி அடுக்கு மாடிக்கட்டிடங்களை வானுயரக்கட்டி 200 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்து கொண்டிருக்கும் 
ஞானகுரு என்ற இளைஞர் தன்னுடைய சொந்த பண்ணைக்கு உரம் வாங்க எதேச்சையாக
சென்றபோதுதான் அவருக்கு அந்த உண்மை உறைத்திருக்கிறது.
தன்  பண்ணை வீட்டுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் பணியாளர்கள் ' தென்னைல  காய் புடிக்கல,
தக்காளி வெளச்சல் கம்மியா இருக்கு , பூச்சி தாக்குதல் என்று சொல்வதை அப்போது பெரிதாக
 எடுத்துக்கொள்ளவில்லை. தற்செயலாக  உரம் வாங்கிய  கணக்கை எடுத்துப் பார்த்த போது அதிர்ந்து போனார்.
விளைவித்த பொருட்களின் சந்தை விலையை விட உரத்திற்காக செலவிட்ட தொகை மட்டும் சம்பந்தமே
இல்லாமல் எகிறியிருந்தது. அதன்  பிறகு நேரம் கிடைக்கும் போது விவசாயிகளிடம் இதைப்பற்றி அடிக்கடி
விவாதித்தார். ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. சரியான விழிப்புணர்வு இல்லாத விவசாயிகள் ரசாயன
உரங்களையும் காலாவதியான போலி மருந்துகளையும்  உபயோகித்து மண்ணையும் நாசமாக்கி மகசூலும்
வராமல் மேலும் மேலும் நஷ்டபட்டுக்கொண்டிருந்தனர்.
இதற்கான தீர்வைக்காண பல விஞ்ஞானிகளையும் நிபுணர்களையும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக
 பேராசிரியர்களையும் அணுகினார். நீண்டகால முயற்சியில் அதற்க்கான தீர்வையும் கண்டார்.
" மண்ண  இன்னிக்கி நஞ்சாக்கிட்டோம் எப்படின்னா, மண்ணுல இல்லாத ஒண்ண  செயற்கையா உரம் என்ற
 பேர்ல உருவாக்கி மண்ணுல போட்டோம். மண்ணு அத  ஏத்துக்கிட்டாலும் தன்னோட தன்மைய
இழந்ததோடல்லாமல் பக்க விளைவா பலவிதமான நோய்களையும் உருவாக்கிருச்சு. பொன்னு வெளையற
 இந்த பூமியிலேயே நெறைய சத்துக்கள் இருக்கு. அத  தனியா பிரிச்சு தேவையான ஊட்டத்தை 
ஏற்ற இயற்கையான  பொருட்களை கலந்து மண்ணுல போட்டா மண்ணும் நல்லா ஆரோக்யமா இருக்கும்.
அதுல வெளயறதும் சத்து  மிக்கதா இருக்கும். இது தான் சார் கான்செப்ட்" என துவங்கினார்.
பொறந்த கொழந்தை மூணு கிலோ, முப்பது வருஷத்தில 60 கிலோ ஆகுதுன்னா எப்படிங்க. இந்த மண்ணுல
வெளஞ்சத ஒடம்பு ஏத்துக்கிட்டு இந்த மாற்றம் நிகழுது. மனுஷனுக்கும் மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு
இருக்குன்னு சொல்றதவிட மண்ணும் மனுஷனும் ஒண்ணுதான்னு சொல்லணும். மண்ணை நாசமாக்கறதும்
தன்னையே நாசமாக்கறதும் ஒண்ணு  தான். விழிப்புணர்வு இல்லாத ஒரே காரணத்தினால
  மட்டும் தான் இது நடக்குது. மண்ணுல இருக்கிற தங்கத்தை பிரிச்சு அதை நகையா மாத்தற வரை அது
மண்ணு தான். அதே மாதிரி இயற்கையா கிடைக்கற வளங்களை ஆராய்ச்சி செய்து நவீன தொழில் நுட்பத்தை
 பயன்படுத்தி 100% இயற்கை உரங்களாக மாற்றி விக்கறோம்" என்றார்.

இவரால் துவங்கப்பட்ட வெற்றிவேல் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் என்ற நிறுவனங்களின் 
வெற்றிவேல் ஹவுசிங் புரமோட்டர்ஸ் ப்ரைவேட் லிமிடெட்ன் மூலமாக பாம் 'ன்' மெடோஸ் என்ற
ப்ராஜெக்டில் 704 அடுக்குமாடி குடியிருப்புகளை தற்போது கட்டி வருகிறார்.

ஸ்ரீ அலகுமலை முருகன் டிரஸ்ட்  என்ற பெயரில் சமூக சேவையும் ஆன்மீக பணிகள் மட்டுமல்லாது பல்வேறு
பணிகளையும் செய்து வருகிறார்.
ஸ்ரீ அலகுமலை வித்யாலயா மெட்ரிக்குலெஷன் பள்ளியில்  தரமான கல்வியை கிராமப்புற மாணவர்களுக்கு
கல்வி சேவையாக 
மிக மிக குறைந்த கட்டணத்தில் அளித்து வருகிறார்.
ஆன்மீகத்தில் கொண்டுள்ள அதீத ஈடுபாடு காரணமாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் குடும்ப ட்ரஸ்ட் மூலமாக
பல்வேறு ஆன்மீகப் பணிகளையும் செய்து வருவதுடன் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ சொர்ண  ஆகர்ஷண பைரவர்
மற்றும்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரிக்கும் உலகத்திலேயே முதல் கோவில் அமைக்கும் பணியிலும் தன்னை ஈடு படுத்திக்
கொண்டுள்ளார். 

தற்போது தொடங்கப்பட்டுள்ள ஸ்ரீ தான்யலட்சுமி பயோ சயின்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம்
கோவையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் ஈடுபடும் அவருடைய குழுவினரால் உருவாக்கப்பட்ட
தனித்துவம் மிக்க இயற்கை உரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகமும், தேயிலை ஆராய்ச்சி கழகமும் (உபாஸி)
2000 முதல் 2003 வரை இதன் மூலக்கூறுகளை ஆராய்ந்து பயிர்களின் மீது அதை சோதித்து
நிரூபணம் ஆன பிறகு விவசாயிகளுக்கும் பரிந்துரை செய்கின்றன.

ஸ்ரீ தான்யலட்சுமி பயோ சயின்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெருமை மிக்கதாக 
இவர் கூறுவது 'ஹ்யூமிக் ராயல்'  என்னும்  மண்ணுக்கு புத்துயிர் ஊட்டும் தயாரிப்பை தான்.
இதன் சிறப்பம்சமாக இவர் கூறுவது
# வேர்களின் செயலாற்றலை அதிகரிக்கிறது.
# சத்துக்களை உறிஞ்சும் திறனை அதிகப்படுத்துகிறது.
# பச்சையம் உருவாக்கத்தை தூண்டுகிறது.
# பயிர் விளைச்சலை 20% முதல் 40% வரை அதிகரிக்கிறது.
# விதை முளைப்புதிறனை மேம்படுத்துகிறது.
# பயிர்களின் இயற்கை நோய் தடுப்பாற்றலை அதிகப்படுத்துகிறது.
# பயிர்களின் தரமான வளர்ச்சிக்கு உதவுகிறது.
# மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது.
# நீர் மற்றும் உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது.
# மண்ணின் கார அமிலத்தன்மையை சமன் செய்கிறது என அடுக்கிக்கொண்டே சென்றவரை நாம் இடை மறித்து
"எல்லாரும் சொல்றதைதானே நீங்களும் சொல்றீங்க" என்றதும் சற்று நிதானித்தவர்
 " பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு அடர்ந்த காடுகள்  மற்றும் விலங்குகள்
சிதைவடைந்து மக்கி போனதுதான் இப்போ பழுப்பு நிலக்கரி (லிக்னைட் ) இதிலிருந்து  கிடைப்பதுதான் பொட்டாசியம்
 ஹ்யுமேட்  என்ற இத்தொழில்நுட்பம்  இந்திய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தால் (இந்திய அரசு நிறுவனம் )
 கண்டறியப்பட்டதாகும்.
 இதே போல் லியோநார்டைட் என்ற இயற்கை வளத்தில்  இருந்தும் நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தி 
 இத்தகைய திரவ உரங்களை தயாரிக்கிறோம். 100% எல்லா நுண்ணூட்ட சத்துக்களையும் கொண்ட இயற்கையான
பொட்டாசியம் ஹியுமேட்டில், ஹ்யுமிக் அமிலம் (வீரியம் 55% - 60% திண்ம நிலையில்)
பொட்டாசியம் (7%-9%) மற்றும் அனைத்து சத்துக்களும் பயிர் வளர்ச்சிக்கு
முக்கிய பங்காற்றுவதால் 20 லிருந்து 40 சதவீதம் வரை (காய் கறிகளில் 100% வரை) கூடுதல் மகசூல்
கிடைக்கும். பறவை விலங்குகளின்  கழிவிலிருந்து தயாரிக்கும் இயற்கை உரம்தான் மண்ணில மக்கிபோய்
ஹ்யுமிக் அமிலமாக மாறுகிறது. இதைவிட வீரியமானதுதான் ஹியுமிக் ராயலாகும். ஒரு லிட்டர்
ஹியுமிக் ராயல் 4டன் தொழு உரத்துக்கு சமம். இதைப்போல வீரியமானதுதான் லியோநார்டைட்
இதுவும் லிக்னைட் மாதிரிதான். ஆனால் லிக்னைட்டைவிட அதிக வருஷம் மண்ணுல மக்கினது.
இது அமெரிக்கா ஆஸ்த்ரேலியா கனடாவின் சில இடங்களில் மட்டும் கிடைக்கும் என்றவரிடம்
சைனா தயாரிப்புகளை வேறு மாநிலங்களில் தடை செய்த விஷயத்தை கேட்டோம்.
(பார்க்க பெட்டி செய்தி ) எந்த ஒரு நல்ல விஷயம் அறிமுகமானாலும் அதுக்கு உடனே போலிகள்
 வருவதை தடுக்கமுடியாது ஆனால் அதுக்காக நல்ல விஷயத்தை மக்கள் கிட்ட கொண்டு சேர்க்காம
 இருக்க முடியுமா. இது என்னோட வியாபாரமா இருந்தாலும் இதை உபயோகித்த விவசாயிகள் மகசூல்
அதிகமாவதையும், நல்ல இலாபம் கிடைப்பதையும் சொல்லும்போது, கிடைக்கற சந்தோஷம் ரொம்ப அதிகம்
என்றவர் இன்னிக்கி வரை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஹ்யூமிக் தான் அங்கீகரீக்கப்பட்ட உரமா இருக்கு.
அவங்க தொடங்கி வெச்ச ரசாயன உரத்த அவங்களே உபயோகிக்கறது இல்ல. நாம தான் இன்னும் கெட்டியா
பிடிச்சிட்டிருக்கோம்.
கெட்ட விஷயம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தேடி போறாங்க நல்ல விஷயம் பக்கத்தில் இருந்தாலும்
கண்டுக்க மாட்டோம். விலை மலிவா கிடைக்குதுன்னு கண்டதையும் மண்ணுல போட்டா என்ன விதமான
பாதிப்புகள் வரும்னு விவசாயிகள் தெளிவா உணர்ந்திட்டாங்க. இதை உபயோகித்த விவசாயிகள், நல்ல
மகசூல் எடுப்பதையும் மண்ணோட  தன்மையில மகத்தான மாற்றம் ஏற்பட்டதையும் சொல்லும்போது ரொம்ப
நிறைவா இருக்கு. அந்த உத்வேகம், இந்தியாவில இருக்கிற ரசாயனம் படிஞ்ச மண்ணை முழுசா மாத்தி உயிர்ப்பு
மிக்க ஆர்கானிக் இந்தியாவா மாத்தணும் என்கிற இலட்சியத்தை நோக்கி எங்க குழு நேரம் காலம் பாக்காம
வேல செய்யுறோம் என்றார். இத்தனை நேரம் பேசியும்
நாம் எந்த ரியாக்ஷனும் காட்டாததால் வெள்ளானைபட்டி வரை போலாமா என்று கேட்டார். கோவையில்
இருந்து 20கீ.மீ தொலைவில் உள்ள இடம் என்பதால் மறுப்பு சொல்லாமல் சென்றோம். 30 நிமிட  பயணத்திற்கு
பின் சண்முக சுந்தரம் என்ற பாபுவின் வீட்டில் வண்டியை  நிறுத்தினார். பி .எஸ். சி பட்டதாரியான பாபுவின்
தாயாரும் மனைவியும் நம்மை தோட்டத்திற்கு அழைத்து சென்று காண்பித்தார்கள்.
அப்போது சரியாக பாபுவும் வந்து சேர்ந்தார்.
அப்பா செய்த விவசாயம் என்னை பெருசா அதில ஈடுபட
வைக்கலை. நான் தனியா என்னோட வியாபாரத்தை மட்டும் கவனிச்சிட்டிருந்தேன் ஒரு கட்டதுக்கப்பறம்
அவரால் அத தொடர முடியல. ஆள் பற்றாக்குறை,  உரத்தட்டுப்பாடு , விலையேற்றம், கட்டுபடியாகாத
விளைபொருள் விலை என பல காரணம்  என்று பேசீட்டு இருக்கும் போதுதான் மனைவி கேட்டாங்க.
நம்ம டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்ல விக்கற காய்கறி விலைக்கும் , நம்ம விளைவித்து கொடுக்கற விலைக்கும்
ஏன் இவ்வளவு வித்தியாசம் என்று அப்பத்தான் யோசிச்சேன். விவசாயம் இலாபகரமான தொழில் இல்லேன்னா,
இதை விளைய வெக்கற விவசாயி எப்படி இதை தொடர்ந்து செய்ய முடியும்? நாம ஏன் இதில இறங்க கூடாதுன்னு
நெனச்சேன். உடனடியா முடிவு செய்து நேந்திரன் வாழை 2 1/2  ஏக்கர், மஞ்சள்  1 1/4 ஏக்கரில் வெச்சேன்.
வெச்ச நேரம் பாருங்க. 20 நாள் தண்ணி பாய்ச்ச முடியல. அதுக்கப்புறம் தண்ணி பாய்ச்சினேன்.
ஆனால் வாழை ஒரு மாசத்துக்கு அப்புறம் வளர்ச்சியே இல்லை. அப்புறம்தான் சொன்னாங்க தொழு உரம்போட்ட
 பிறகுதான் வாழை வெக்கணும்னு. என்னடா வம்பாபோச்சே என்று இடிந்துபோய் உட்கார்த்தபோதுதான் ஒருத்தர்
சொன்னாரு இதையெல்லாம் புடுங்கி எறிஞ்சிட்டு வேற ஏதாவது போடுன்னாரு. இத்தனை செலவு பண்ணி
 முட்டுவளி போட்டு எப்படிங்க சும்மா விட முடியும். வாழைக்கன்னு  இனி  பொழைக்காது என்ற நிலைமை
வந்திடுச்சு. அப்பத்தான் நான் கும்பிடற சாமி மாதிரி தீபன் சந்துருன்னு  ஒருத்தர்  வந்தார். எப்படியும் காப்பாத்த
முடியாதுன்னு
முடிவுக்கு வந்துட்டீங்க, கடைசியா ஒரு முயற்சி பண்ணுங்கன்னு கருப்பா ஏதோ ஒரு திரவத்தை கைல
 குடுத்துட்டு காச வாங்கிட்டு போனாரு. ஆனது ஆச்சுன்னு அதை ஊத்தி தண்ணி பாய்ச்சி  விட்டோம்.
நம்பவே முடியலைங்க. இனி பொழைக்காதுன்னு என்று நினைத்த வாழைக்கன்னு அடுத்த 10 வது நாள்,தள,தளன்னு
 நிக்குதுங்க என்றவர், தோட்டத்தினுள் அழைத்து சென்று காண்பித்தார். நேந்திரன் வாழையின் புதிய குருத்து
பச்சை பசேலென்று பெரியதாக விரிந்தும்,
தெளிப்புக்கு முன்புள்ள மருந்து தெளிக்காத மரத்தின் இலை நன்றாக சிறுத்தும் காணப்பட்டது. மஞ்சள் செடியின்
உயரம் நாம் சென்ற போது 4அடிக்கு குறையாமல் இருந்தது. ஆனால் சோதனைக்காக ஹ்யுமிக் ராயலை
உபயோகபடுத்தாத நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் செடி 2 அடியை எட்டவில்லை. 5 மாதமான ஜி 9 வாழை
 4 அடி உயரம் எட்டும்போதே
அதன் தண்டு முற்றிய வாழைத் தண்டை ஒத்துள்ளது. ஊடு பயிராக மஞ்சளின் நடுவில் மிளகாய், பீர்கங்காய்,
அரசாணிக்காய் போன்றவைகளின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாய் இருந்தது.

சத்தியமங்கலத்தில செந்தில்குமார்னு ஒரு விவசாயி (91504 01013) 100 கூடை தக்காளி எடுத்திட்டிருந்தார்
ஹ்யுமிக் ராயலை உபயோகிச்ச பிறகு 260 கூடை எடுத்திருக்கார்.

கோவை கரடிமடை பகுதியில் 10 ஏக்கரில் விவசாயம் செய்துவரும் திரு. பார்த்திபன் (98421 07637) அவர்கள்
இரண்டு ஏக்கரில் தக்காளியும் முக்கால் ஏக்கரில் வெண்டையும் பயிரிட்டுள்ளார். இதற்குமுன் பயிரிட்டபோது
26,000 கிலோ வரை மகசூல் செய்த இவர், ஐந்து மாதங்களுக்கு முன்பு ஹ்யுமிக் ராயலை பயன்படுத்தி
58.000 கிலோ வரை மகசூல் எடுத்துள்ளார். வெண்டை முக்கால் ஏக்கரில் 12 டன்னுக்கு மேல் அறுவடை
செய்துள்ளார். நாம் அங்கு சென்றபோது தொழிலாளர்கள் வெண்டை பறிப்புக்கு காட்டுக்குள்ளே  செல்ல தயங்கி
நின்றிருந்தனர். காரணம் கேட்ட போது செடிகளின் அடர்த்தி இதுவரை பார்க்காத அளவுக்கு அதிகமாக இருந்ததாக
இருப்பதாக கூறினார்கள். தற்போது பீர்க்கன் இரண்டு ஏக்கரில் பயிரிட்டுள்ளார். இதற்கு முன் எடுத்த மகசூலை
விட இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகம் எதிர்பார்ப்பதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.   

கோவை குப்பனூரை சேர்ந்த விவசாயி ஆறுச்சாமி (9750403895)கூறும்போது தக்காளி ஒவ்வொரு செடியிலும்
ஒரு கூடை அளவிற்கு காய் பிடித்துள்ளதாம். இதை அடுத்துள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்,
வாழை இத்தனை  வருடங்கள் பார்த்திராத அளவு செழிப்புடன் இருப்பதாக சிலாகித்து கூறும் இவர் மஞ்சளில்
நோய் தாக்குதல் இன்று வரை இல்லவே இல்லை என்கிறார். ஒரு புள்ளியோ இலை  கருகலோ சுத்தமாக இல்லை.
இதற்க்கு முன் பூச்சிக்கொல்லி மருந்துக்கு செலவிட்ட தொகையை விட குறைவான பணம் தான் இந்த ஹ்யுமிக்
ராயலுக்கு செலவானது. அதற்க்கு முன் எருவுக்கும் தொழு உரத்திற்கும் ஆகும் செலவு, ஆள் கூலி, நேர  விரயம் 
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த இயற்கை பயிர் ஊக்கி மண் வளத்தை காப்பதுடன் செழிப்பாக
வளர்ந்து நிற்பதை பார்க்கும் போதே எங்கப்பா காலத்துக்கே போன மாதிரி இருக்குங்க என நெகிழ்ச்சியுடன் கூறினார்.


எதை விதைக்கிறோமோ அதுவே விளையும் என்பது பழமொழி. விஷத்தை விதைத்து பயிர்களை விஷமாக்கி விஷ
தான்யத்தை உண்டு நோய் எதிர்ப்பு சக்திகளை முற்றிலும் இழந்து சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, மூட்டு வலி,
ரத்த அழுத்தம் புற்று நோய், கர்பப்பை நோய்கள் தாக்கியுள்ள நோயாளிகள் அதிகம் கொண்ட நாடாக
அளவில் நமது இந்தியா மாறியுள்ளது. இந்த 15 வருடங்களில், பிறந்த குழந்தையிலிருந்து 30 வயதுக்கு மேல்
பெரும்பான்மையினருக்கு சர்க்கரை நோய் வர என்ன காரணம்? நிச்சயமாக நாம் விழிப்புணர்வு இல்லாமல்
உபயோகித்த ரசாயன பூச்சிக்கொல்லி முறை தான். எனவே இதை மாற்றி உண்மையான
(ஆர்கானிக் கிரீன் ரெவல்யூஷன் ) இயற்கையான பசுமை புரட்சிக்கு வித்திட்டு இதை பரவலாக்குவது
நமது நோக்கமாக மட்டுமல்லாது கடமையாகவும் மாறவேண்டும்.
களிமண்ணை எந்த ஊர்ல போய் பாத்தாலும் கட்டி கட்டியாதான் இருக்கும். ஆனா எங்க ஹ்யுமிக் ராயலை
மண்ணுல போட்டு நாலு நாள் கழிச்சு பாருங்க மண்ணு பொலபொலன்னு இளகி இருக்கும்.
இது எப்படி வேல செய்யுதுன்னா மண்ணுல போட்ட உடனே வேர் முடிச்சுகளை திறந்து நைட்ரஜன் உருவாக்கத்தை
இயற்கையா வேகப்படுத்தி மண்ணின் சத்துக்களை செடியை ஏற்க வைக்கிறது.
மேலும் தெளிப்பின் மூலம் இலைகளின் பச்சையம் உருவாக்கத்தை தூண்டி இலைகளை பெரிதாகவும் செழிப்பாகவும்
ஆக்குகிறது. இதனால் தாவரம் தனக்கு தேவையான உணவை(ஸ்டார்ச்) அதிகமாக தயாரிக்கிறது. இது இரண்டும்
சரியாக இருந்தாலே விளைச்சல் அதிகமாகும் என்பதை நான் சொல்லவேண்டியது இல்லை.


நம்ம முன்னோர்கள் விவசாய முறை நல்லா தாங்க இருந்தது. விதைப்புக்கு முன்னால கட்டான்னு ஒரு பயிரை
போட்டு ஆள் உயரத்துக்கு வளரவிட்டு அத அப்படியே  மண்ணுல போட்டு உழவு ஒட்டி, மக்க வெச்சு அப்புறமா
பயிர் செஞ்சாங்க. இப்போ ஏன் அந்த மாதிரியான முறைகள் நாம செய்யறதில்ல.
1962 க்கு பிறகு தாங்க நம்ம நாட்டுக்கு யூரியா பசுமை புரட்சிங்கற பேர்ல உள்ள வந்தது. அத மொதல்ல
பஞ்சாப்ல உபயோகிச்சு அதிக மகசூல் எடுத்து அரசாங்கமே விளம்பரம் செஞ்சது. அத பாத்து தான் எல்லா
விவசாயிகளும் ரசாயன உரத்துக்கு மாறினாங்க. அன்னிக்கி பஞ்சம் வந்ததால முக்கிய தேவை அதிக உணவு
உற்பத்தியா இருந்தது. ஆனா இன்னிக்கு தேவை ஆரோக்யமான அடுத்த தலைமுறை தான்.
நாட்டு நலனுக்காக அதிக விளைச்சலுக்கு ரசாயனத்தை பயன்படுத்திய நாம, இன்னிக்கு அடுத்த தலைமுறைக்கு
ஆரோக்யமான, சுகாதாரமான சுற்றுச்சூழலை கொடுக்க மீண்டும் ஒரு இயற்கையான பசுமைப்புரட்சிக்கு வழி வகுப்போம்.

MIC MAC TONICX  அப்பிடின்னு ஒரு உரம். அந்த உரத்தோட முக்கியமான வேலையே பெண் பூக்களின் வளர்ச்சியை
அதிகரிக்கறதுதான். இதனால மகரந்த சேர்க்கை அதிகமா நடந்து மகசூல் தானாகவே அதிகமாகுது.
இதை கடற்பாசியிலிருந்து தயாரிக்கறோம். கடற்பாசில இருந்து தயாரிக்கற நெறய உரங்கள் சந்தைல கெடச்சாலும்
பல விதமான உயர்தர கடற்பாசிகளில் இருந்து நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பலவித ஆராய்ச்சிக்குப்பின் 
இதை நாங்க ரொம்ப கவனமா உருவாக்கறோம்.  கொழந்தைய வளர்க்கற மாதிரி.
செயல்பாட்டில ஹ்யுமிக் ராயல் கொழந்த மாதிரின்னா  மிக் மேக் அதுக்கு அம்மா மாதிரி.
பொறந்த கொழந்தை எவ்ளோ அதிகமா தாய்ப்பால் குடிக்குதோ அந்த அளவுக்கு அதிகம் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகம் இருக்கும். புட்டிப்பால் குடிச்சா அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஒடணும். அதே மாதிரி பயிருக்கு
தேவையானதை கொடுத்தா அது நோய் தாக்குதல் இல்லாம இருக்கும்.
ஒரு முக்கியமான விஷயங்க. நாம சாப்பிடற சாப்பாடு தான் நம்ம குணநலன்களை முடிவு செய்யுது. அதில
யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இனி நீங்களே முடிவு பண்ணுங்க. நம்ம கொழந்தைங்க
இயற்கையா வெளஞ்சத சாப்பிடனுமா. இல்ல ரசாயனத்த சாப்பிடனுமான்னு. மேலும்  இன்னும் சில தினங்களில்
இயற்கையான பூச்சிக்கொல்லி மருந்துகள் வண்டு, பேன், புழு , வேர்ப்புழு மற்றும் பல நோய்களுக்கான
இயற்கையான பூச்சிகொல்லி  மருந்துகளை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.


SDLBL ன் குறிக்கோளே " இந்தியாவில் ரசாயன உரத்தால பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு மீண்டும் புத்துயிர்
அளித்து, நம் முன்னோர்கள் நமக்கு விட்டுசென்ற அற்புதமான உலகத்தை அடுத்த தலைமுறைக்கு 
கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான். ஒரு கை தட்டினா ஓசை வராது. இந்த உலகத்தை மாற்றும்
இன்னொரு கை விவசாயினுடையது. அந்தக் கையோடு எங்கள் கையையும் சேர்த்து இந்த மாற்றத்தை நிகழ்த்துவோம்.
என்று உறுதி பட கூறியவர் " இந்தியா போன்ற விவசாயத்தை தொழிலாக கொண்ட நாட்டில, மேலை
நாடுகளுக்கெல்லாம் நம் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த ஒரு விஷயத்த, இப்போ மறுபடியும் புதுசா சொல்ல
வேண்டியிருக்குன்னு  நெனைக்கும்போது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. ஒரு நல்ல தொழில் நுட்பம் என்னோட
கைல கெடச்சிருக்கு. இத சரியான நேரத்துல கொண்டுபோய் சரியான எடத்தில சேர்க்கணும். இதுக்காக தான்
 ஆண்டவன் என்னை நல்ல லாபம் தரக்கூடிய கட்டுமானத்துறையில் இத்தனை வருஷம் ஈடு பட வெச்சு,
சம்மந்தமே இல்லாத துறையில கால் பதிக்க  வெச்சிருக்கான்.
இதை நான் தொடங்கும்போது எவ்ளோ லாபம் வரும்ன்னு கணக்கு போட்டு தொடங்கலைங்க.
நான் சம்பாதிச்சதெல்லாம் இந்த மண்ணை மாத்த உபயோகமாச்சுனா சந்தோஷமா செய்வேன்.
அதுமட்டுமில்லால் விவசாயிகளுக்கு எங்களால் முடிந்த அனைத்து விதமான அறிவியல் ஆலோசனைகள்,
நிதி உதவிகள், மானிய விபரங்கள் போன்ற உதவிகளையும் செய்வதற்கான ஒரு தனி குழுவை அமைக்க
 இருக்கிறோம்.
அதுமட்டுமில்லாமல் இளைய தலைமுறையினருக்கு பாரம்பரிய உணவு முறைகளை அறிமுகப்படுத்தி, மேற்கத்திய
உணவு முறையின் தீமைகளையும் நம் பாரம்பரிய  உணவின் நன்மைகளையும் ஒரு குறித்த விழிப்புணர்வையும்
ஏற்படுத்த போகிறோம்.

இது எல்லாவற்றையும் விட  வரும் காலங்களில் எத்தனை  லட்சம் ஏக்கர் நிலத்தை ரசாயனமில்லாத நிலமாக
மாற்றப் போகிறோம், எத்தனை விவசாயிகளை  இயற்கை வேளாண்மை நோக்கி ஈர்க்க போகிறோம் என்ற ஒரே
எண்ணத்துடன், கோவையில் துவங்கி ஓர் உலக சாதனை நிகழ்த்தும் வேகத்துடனும் வீரியத்துடனும் எங்கள்
பயணத்தை துவங்குகிறோம்...



பெட்டி செய்தி
சீன போன்ற அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதியான
(ஹ்யுமிக் குருணை மற்றும் பவுடர்  )
சில உரங்கள் ஹ்யுமிக்கில் நனைத்து எடுக்கப்பட்ட மண்ணைத்தான் உரம் என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள்.
இது கர்நாடக மாநிலத்தில் பயிர் கருகுதல் போன்ற எதிர்மறை ஏற்படுத்தியதால் கர்நாடக அரசு இதை தடை செய்தது.
நம்மைபோன்ற தரமான தயாரிப்புகள், கர்நாடக அரசின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் மூலம் ஆய்வு செய்து விற்பனை
செய்ய அனுமதித்துள்ளது.

தமிழக இளைஞர்களுக்கு SDLBL ன் அறைகூவல்
............................................................................................................ 
தமிழகத்தில்  உள்ள படித்த மற்றும் படிக்காத, துடிப்பு மிக்க இளைஞர்களுக்கு SDLBL ன் அவசர அழைப்பு.
தமிழகத்தை ரசாயனமில்லாத மாநிலமாக மாற்றும் எங்களின் குறிக்கோள் தங்களுக்கும் இருந்தால்,
இயற்கையாக ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்யவும், வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்யவும்
அனைத்துவிதமான ஆலோசனைகளையும் வழங்கி, ஊக்கப்படுத்தி, வழிநடத்தவும் எங்கள் குழு எப்பொழுதும் தயாராக
உள்ளது.
94430 43150

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக